பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வல்லிக்கண்ணன் சதிச்செயல்கள் வாழ்கிறது ஐயோ! இன்று தர்மந்தான் சாகலாமோ கொடுமை என்னே! கதர்ச்சட்டை போடுகின்ற பலபேர் இன்று காதகராய் இருக்கின்றார் அச்சட் டையாம் புதர்நடுவில், கொடும் பாம்புக் கூட்டத்தார்கள் கோயிலான நம்நாட்டைப் பணயம் வைத்தே அதர்மத்தில் நடக்கின்றார்! உண்மைக் கோமான் அண்ணலினை, அயோக்கியத்தை மறைப் பதற்கு, விதவிதமாய்ப் பயன்படுத்தி ஆள்கின்றார்கள் வேசியைப்போல் ஆனார்கள் வெட்கம்! வெட்கம்!” கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலை யில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வர்ணித்து வகுந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார். 'நம்நாட்டு நாடகத்தை நசுக்கி விட்டார்! நாசத்தால் கலைத்தாயைக் கொல்கின்றார்கள் கும்மிருள் தான் சூழ்ந்ததின்று! பல நல்லோர்கள் குடிப்பதற்குக் கூழின்றி, ஆடை யின்றி அம்மம்மா, பெருந்துன்பச் சேற்றில் வீழ்ந்தார் அம்மணிகள் வறுமையினால் கற்பைவிற்று