பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஐ வல்லிக்கண்ணன் சூது சூழ்ச்சி எங்கனும் வேதனைகள். எங்கனும் இதுவே நாடடின் இயல்பென்றால் நாடா இது? . - மேலும், குடிகாரர் மிரட்டுகின்றார். கொலைகாரர் தலைமை கொண்டே பாதகம் செய்கின்றார்கள். தடிகாரர் வாழ்கின்றார்கள். தகைமையர் அவர் பின்னாலே எடுபிடி மக்களாகி எல்லாமே இழந்தார்! விடுதலை நல்லோ ருக்கா, வீணர்க்கா என்றகேள்வி நடுநிலைநின்று பார்ப்பார் நன்கெண்ணிச் சொல்லவேண்டும் கெடுதலைப் புரிகின்றார்கள் கேடெலாம் புரிகின்றார்கள் இருநிலம் ஏய்க்கின்றார்கள் இதுதானா விடுதலை? ஏன்? என்று சூடாகக் கேட்கின்றார் கவிஞர். வாழ்வெல்லாம் உழைக்கின்ற வல்லாருக்கே, வளர்ச்சி ள் பெருகிடவே வேண்டும். அன்னார் தாழ்வெல்லாம் நீங்கிடவே வேண்டும். சான்றோர் தன் வழியில் இந்நாடு டக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ه நீ 懿 سمي அறவழியில் நடப்போர்க்கே ஏற்றம் வேண்டும்: அஞ்சாத புதுமை நெறி மலர வேண்டும். இவ்வாறு இன்னும் பல நல்விருப்பங்களை முன் வைக்கும் கவிஞர் இன்றைய நிலைமைகள் குறித்து விருப்பு வெறுப்பின்றி விமர்சன ரீதியில் கருத்துக்களைப் பொறித்துள்ளார். 'கெடுதல்கள் மாறும் போதும் கீழ்மைகள் சாகும் போதும் அடுதல்கள் உண்மை தன்னை அழித்திடாப் போதும், விஞ்சும்