பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த் அருங்கவிஞர். 147. நிலை, மக்களின் துயரங்கள், அவர்களின வறுமை வாழ்க்கை பற்றி எல்லாம் பேசுகிறான். எத்தர்கள், பொய்யர்கள் முதலானோர் உயர் நிலையில் உல்லாசமாக வாழ்வதை சுட்டிக் காட்டுகிறான். எங்கும் நீலித்தனத்தின் நிறைந்த சாதனை! பேச்சில் பெரிய நீச்சலடித்து, வாய் வீச்சால் வயிறு வளர்க்கும் பேதைகள்! அடுத்துக் கெடுக்கும் அகமறி வஞ்சகர்கள் உடுத்தும் உடையை உண்ணும் உணவைப் பார்த்து வயிறெரி பாதகர்! துரோகம் தேர்ந்து செய்யும் திருட்டு நெஞ்சினர் காட்டிக் கொடுத்துக் கயமைத்தனத்தால் ஈட்டும் பதவி பிடிக்கும் எத்தர்கள் இப்படி இவர்கள் ஒப்படி நடத்தி செப்படி செய்வதால் செயல்கள் நாசம்!” சமூக நிலைமை இவ்வாறு இருக்கையில் இவற்றில் எதை ஒவியமாய் தீட்டி மகிழ என்று அவன் சூடாகப் பேசுகிறான். அவனது நோக்கும் கொள்கையும் சரியல்ல என்று பிறர் குறை கூறுகிறார்கள். எங்கனும் நம்மவர் எழுச்சி வேண்டும் பொங்கும் புதுமை தங்கும் அறிவார் செயல்கள் சிந்தனை வேண்டும் அதற்குத் துணை புரியும் விதத்தில் கலைகள் விளங்க வேண்டும் என்று ஒருவன் வலியுறுத்துகிறான். ஒவியன் சிந்தை மாற்றம் கொண்டு, பன்னல ஒவியங்களும் வரைய வேண்டும் என்று அவனிடம் அன்பு கொண்ட முல்லை என்பாள் வேண்டுறோள். -