பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 149 வீங்கிய புகழும் விளைத்த அறமும் வாழும் கண்முன் மலரும் காலமே!’ என்று அவனுடைய குருவும் அறிவுறுத்துகிறார். பெருங்கவிக்கோ, அவரது இயல்பின்படி, ஆழமான கருத்துக்களையும், ஒளிரும் சிந்தனைகளையும் இக்காவியம் நெடுகிலும் எடுத்துக் கூறியுள்ளார், இயற்கையின் அழகை -யும் ஆற்றலையும் வியந்து பாடும் கவிதை வரிகள் காவியத்துக்குச் சுவை சேர்க்கின்றன. இறந்த காலத்தின் மாண் புகளையும் குறைகளையும், எதிர் கால வளர்ச்சி களையும் வர்ணிக்கும் பகுதிகள் கவிஞரின் கற்பனை விரிவுக்கும், கவிதைத் திறனுக்கும் சான்றுகளாக அமைந் துள்ளன. ‘நனவு தற்காலம் கனவெதிர் காலம்! நனவே கனவின் கனிவாய் முகிழ்க்கும்! நேற்றென்பதுவோ கூற்றம் வாய் வீழ்ந்ததாம்: தோற்றும் நாளையோ சொல்வதற் கிலையால் இன்றென்பதுவே கண்ணறி உண்மையாம்! நன்றிது தெளிக! நயம்தனை அறிக நீ!’ என்று குருவின் அறிவுரை மூலம் காலத் தத்துவத்தைக் கவிஞர் தெளிவுபடுத்தியிருக்கிறார் மேலும், தெளிக சிந்தை! தேர்க நல்லறம்! துணிவு கொள் இறைமைத் தொண்டிலே - முன்னில்! பணிவுகொள். இகழ்வார் பதறிட நிலம்வெல்! பாதை தவறேல் பண்பைப் போற்று - சோதனை வருமேல் துவண்டு போகாதே! வேதனை மாற்ற ம்ாதிற முடியற்சிகொள்!" என்று வாழும் நெறிய்ையும் வகுத்துக் காட்டுகிmக *கால்க்கணி.