பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுநத அருங்கவிஞர் 155 மலேசியாவில் தாம் கண்ட இடங்கள், பழகிய மனிதர் கள், தமக்கு உதவிய அன்பர்கள், தாம் நிகழ்த்திய சொற் பொழிவுகள் முதலியவற்றை பெருங்கவிக்கோ இக்காவி யத்தில் பதிவு செய்துள்ளார். பினாங்கின் கடற்கரை அழகு, ஈப்போவின் எழில் நிறைந்த இடம், கோலாலம்பூரின் சிறப்பு, சிங்கப்பூர் துறைமுகத்தின் பெருமை, மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் உள்ள தமிழர், தமிழர் இயக்கங்கள், தோட்டங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தமிழர் : மலேசியாவில் கல்வி நிலை, சீனர்களின் வாழ்க்கை முறை, சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சி நிலையப் பணிகள், அந்நாடு களின் தொழில் வளம், செல்வச்சிறப்பு ஆகியவற்றை இக்காவியம் விரிவாகக் கூறுகிறது. உண்மையாக வாழும் மனிதர்கள் பற்றிய செய்திச் சித்திரமாக இப்பகுதிகள் அமைந்துள்ளன. காவியத்தின் முக்கிய பாத்திரமாகச் செயல் புரியும் பாமணி பெருங் கவிக்கோவின் பிம்ப மாகவே காணப்படுகிறார். காவியத் தலைவர் சுவாமி இராமதாசரின் அருமை பெருமைகளை, அவருடைய அன்புச் செயல்களை, அருள் தொண்டுகளை இக்காவியம் நன்கு விவரிக்கிறது. "ஓங்கு புகழ் தமிழர்நிலை உயரவேண்டும் உலகத் தமிழ்ப் பண்பாட்டை இணைக்க . வேண்டும் வீங்கு நலம் செய் பணிகள் நிலைக்க வேண்டும் வேற்றுமையும் சீரழிவும் நீங்கவேண்டும்.' என்பது சுவாமியின் நோக்கமாக விளங்குகிறது. கோலாலம்பூரிலும், சிங்கப்பூரிலும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் தமிழரின் பண்டை வரலாற்றை எடுத்துக் கூறுகின்றன.