பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 3 103 ஆன் மட்டும் போராடி அயர்ந்தாரும் கூடத்தான் எல்லாம் இறைவன் இனிய செயல் என்கின்றார்! குடிப்பதற்குக் கூழ்கூடக் கும்பிக்கு இல்லாமல் வெடித்துக் குமுறுகின்ற வீரன் ஏழைமகன் துடிக்கும் பொழுதினிலும் தூய இறை செயலென்பான் படித்த படிப்பும் பாடமெலாம் ஈதொன்றே! கட்டழகி இன்பக் கனியழகி நஞ்செய்யிலே நட்டு உழைக்கும் நனியழகி நம்நாட்டில் உடுத்துதற்கும் கூட ஓராடை நூலாடை எடுக்க முடியாமல் ஏழ்மையிலே வாடுகின்றாள் எல்லாம் இறைவன் செயலென்றே! ஆனாலும் வல்ல செருக்குடைய வணிதை மாடியிலே உல்லாசமாயிருக்கும் ஓரத்துச் சன்னலுக்கும் சில்லாடைப் பட்டாலே திரையிட்டு வாழ்கின்றார்: இவர்களும் கூடத்தான் இறைவன் செயலென் பார்: தவமும் பாவமும் சரிசமமா சிந்தியுங்கள்!" என்று யதார்த்த நிலைமைகளை கண்முன்னே கொண்டு நிறுத்தி, சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டுகிறார். அன்றாட வாழ்வில் தென்படுகிற முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கவிஞர் ஆத்திரத்தோடு பாடியுள்ள கவிதைகள் படிப்போர் மனதில் பதியக் கூடியவை. வாழ்க் கையின் அவலங்களை எண்ணி மனம் குமைந்து கொதிப் புறும்படி செய்யும் ஆற்றல் பெற்றவை. குணமில்லாத் தீயர்கள் பதவி பெற்று, பொது வாழ்வில் ஏறிக்கொண்டு, தன்னலம்ே. பெரிதாக் அண்ன்னிச்