பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருக்கவிஞர் 135 என்று உளம் நைந்து கூறும் கவிஞர் வேதனையோடு நாட்டினை நினைத்துப் பாடுகிறார் "ஈடிலா என்றன் நாடே இன்றமிழ் அன்னை நாடே! பேடியர் வீரம் இல்லாப் - பேதையர் வாழும் நாடாய் வாடிநீ போவ தும்ஏன்? வரலாற்றை மறப்பதும் ஏன்? நீடிய துயிலை என்று நீகளை வாயோ நாடே!’ காப்பியத் தலைவன் கவி அருட்கனியின் எண்ண ஒட்டமாக வேகத்துடன் தனது சிந்தனைகளையே பெருங் கவிக்கோ கவிதையாக்கியிருக்கிறார். அவற்றில் உண்மை கள் ஒளி வீசுகின்றன. நாட்டின் இழிநிலை மாறவேண்டும், மாற்றப் பட வேண்டும். அதற்கு வழிதான் என்ன?

  • நல்லவர் வாய்தி றந்தால்

நல்லவர் ஒன்று சேர்ந்தால் நல்லவர் ஆண்மை பெற்றால் நல்லவர் செயல்கைக் கொண்டால் அல்லவர் தேய்வர் ஈன அல்லல்கள் குறையும் தீய அல்லலில் வாழ்வோ ரெல்லாம் அணிநலம் அமைவா ரன்றோ!' என்று கேட்கிறார் கவிஞர். . எங்கனும் ஒலம், எங்கலும் ஏமாற்றுக்கள், எங்கனும் சூழும் துன்பம் எங்கலும் இடர் வெள்ளங்கள். எங்கனும்