பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

2. யோகாசனங்கள்

3. குழு விளையாட்டுக்கள் (கோகோ, கபடி, அட்டிய பட்டியா)

4. தாளலயப் பயிற்சிகள் (லெசிம், நடனம்)

5.தற்காப்புக் கலைப்பயிற்சிகள் (மல்யுத்தம், லட்டி)

2-1. உடலழகுப் பயிற்சிகள் தண்டால் பஸ்கி

உடலழகுப் பயிற்சிகளில் முதலாவது வருவது தண்டால், பஸ்கிப் பயிற்சிகள்.

தண் என்ற வடமொழிக்கு புஜம் என்று பொருள். இந்தப் பயிற்சி, கைகளை வலிமையுடையதாக்கும்.

பஸ்கிப் பயிற்சிகள், கால் தசைகளை உறுதியாக்கும்.

இந்தப் பயிற்சிகள் கொஞ்சம் கடுமை நிறைந்ததாகும். ஆனால், அதிக எண்ணிக்கையில் செய்கிற போது, கால்களும் கைகளும், நல்ல உறுதியும் வலிமையும் அடையும்.

கஷ்டமான பயிற்சி என்பதால் மாணவர்களுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகக் கற்பித்து, பிறகு எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும்.

தண்டால், பஸ்கிப் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கிற போது, வயது, இனம், மாணவர் திறமை முதலியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பயிற்றுவிக்கும் முறை : வகுப்பை அணித் திறப்பு முறையில் வரச்செய்து, பயிற்சிகள் செய்ய போதிய