பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வல்லிக்கண்ணன் மலையாளம் மகாகவி சங்கர குருப்பு, மகாகவி வள்ளத்தோள், இந்தி சிவமங்கலசுமன், சுமத்திரானந்தன் பந்து, தெலுங்கு தாசரதி, சந்தியாலா பாப்பய்யா சாஸ்திரி, உருது மசால் லக்னவீ, சீமாப் அக்பராபதி, குசராத்தி சியோத்சனா சுக்லா, அர்தேஸ் பராம்ஜி கபர்தார், வங்கம் இரவீந்திரநாத் தாகூர், நிர்மலசந்திர சட்டோபாத்தியாயா, ஒரியா இலட்சுமிகாந்த மகா பாத்திரர், குருசரண் பரிசா, சிந்தி கிருஷ்ண கிருபலானி, கிசன் சந்த் தீர்த்ததாஸ் கத்ரி,வடமொழி பண்டித கோபால சாஸ்திரி, விந்தியேசுவரி பிரசாது சாஸ்திரி, மராட்டி நாராயண கேசவ பேஹரே, மாச்வே, அசாம் அதுல் சந்திர ஹாஜரிகா, திருபால் போக் பருவா, கன்னடம் இசுவாஸ்ணகல், கோவிந்த பாயி, ஆங்கிலம் மேரிசி கிரிஸ்து, பெஞ்சமின் காலின்ஸ் உட் பரி,காஷ்மீர் சம்புநாத பட் அலீம்”, பஞ்சாபி டாக்டர் பாயிiரசிங், ஆகியோரின் கவிதைகளை கவிஞர். சேதுராமன் மொழி பெயர்த்திருக், கிறார்.ஒரு மொழியின் படைப்பை மற்றொரு மொழிக்குச் சுவையாகப் பெயர்த்துத் தருவது சிரமமான காரியம். அதிலும் கவிதையை மொழிபெயர்ப்பது மிகவும் சிரம மானது. மூல எழுத்தாளரின் உள்ளத்தை உணர்ந்து, அவரது படைப்பின் பொருளை நன்கு அறிந்து கொண்டு, மொழிபெயர்ப்பு என்று தெரியாத தன்மையில் இன்னொரு மொழியில் ஆக்குவதுதான் வெற்றிகரமாகவும் படிப் பதற்குச் சுவையும் இனிமையும் கொண்டதாகவும். அமையும். பெருங்கவிக்கோ ரசித்துப் பாராட்டத் தகுந்த முறை யில் கவிதைகளை சரளமாகவும் இனிமையாகவும் உணர்ச்சி ஒட்டத்துடனும் தமிழாக்கியிருக்கிறார். மொழி பெயர்ப்பு என்று தோன்றாத தன்மையில் நல்ல தமிழ்ப் பாடல்களாகவே அவை விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம். rt . இங்கே