பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 159 அலை அலையாய்த் துன்பங்கள் வந்த போதும் அதைத் தீர்க்கும் சக்தி அந்த அன்பால் ஆகும்! விலை கூறி விற்காதீர் உள்ளம் தன்னை விதி சமைப்பீர் அன் பொன்றே உம்மைக் காக்கும்!" என்று கவிஞர் இக்காவியத்தின் வாயிலாக அறிவுறுத்து கிறார். மதங்களினாலும் சாதித் திமிரினாலும் நாட்டில் பிரி வினைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. இன்றைய அரசியலும் இணைந்து கொண்டு முறைகெட்ட போக்கு களை ஆதரிக்கிறது. அதனால் எங்கும் பாதகமே பெருகி வளர்கிறது. இந்த உண்மைகளை எளிய நடையில், இனிய சத்தங்களில் மக்களுக்குப் புரிய வைக்கிறார் கவிஞர். 'அரசியல் மோசடிக்கும் அவரவர் காசடிக்கும் உரசிடும் தீக்குச்சாக உளசாதி முறைகள் தம்மை வரம் போலப் பயன்படுத்தி வாகைகள் பெறுவதன்றி சிரமேற்றே சாதிபேதத் திமிரொழி திட்டமுண்டோ? நெஞ்சில் பழிவாங்கும் எண்ணத்தை வளர விட்டால் நாசம் தான் விளையும்; நன்மைகள் ஏதும் எவருக்கும் ஏற்பட்டு விடாது. அன்புடைமை ஒன்றால் கண்ணியம் வளர்த்தால் நன்மை பிறக்கும் என்று இக்காவியம் கூறுகிறது. அரசியல் கட்சிகள் சாதிகளைப்பயன்படுத்தி எவ்வாறு தங்களை வளர்த்துக் கொள்கின்றன; ஆட்சியைப் பற்றிக்