பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

2. திறமையானவர்களாக குழுக்களில் இடம்பெறச் செய்து, அந்தந்த ஆற்றல் மிக்க குழு, அப்படிப்பட்ட குழுக்களுடன் போட்டி இடுகின்ற சூழ்நிலையை அமைத்துத் தருதல் வேண்டும்.

3. பள்ளிகள் சார்பாக விளையாடுகிற திறமைமிக்க ஆட்டக்காரர்கள், உள்ளகப் போட்டிகளில் பங்கு பெறாமல் செய்ய வேண்டும்.

4. பல போட்டி ரில் ஒரு சில மாணவர்களே பங்கு பெறுவதைத் தவிர்த்து ஓரிரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கு பெறலாம் ன்ற விதியை ஏற்படுத்திக் கட்டுப்படுத்துவது நல்லது.

5. பள்ளிகளில் இருக்கின்ற இடவசதி, உதவி சாதனங்கள், பொருளாதார வசதி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொாவது போல, போட்டிகளை நடத்த வேண்டும்.

6. முழு அளவில் பங்கு பெறுகிற குழுக்களுக்கு, அதிகமாக வெற்றி எண்களை வழங்க வேண்டும்.

7. மாற்றாட்டக்காரர்களை வெளியே நிறுத்திவிட்டு, நிரந்தர ஆட்டக்காரர்களே ஆட்டம் முழுவதையும் ஆடி விடுவார்கள். மாற்றாட்டக்காரர்கள் குறைந்தது 10 நிமிடம் ஆடவேண்டும். (கால் பந்தாட்டிம்) அல்லது 4