பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

போட்டி நிரலில் குழுக்களை தேர்ந்தெடுக்கும் போது, சீட்டுக் குலுக்கிப் போடுகிற முறையைப் பின்பற்றவும்.

இதில் மேல்பாதி, கீழ்ப்பாதி என்று நாம் அடிக்கடி குறிப்பிடுகிறோம். இதை எப்படிக் கண்டுபிடிப்பது?

1. குழுக்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருந்தால் எளிது. அதற்கான சூத்திரம் . 10 அணி என்றால், மேல்பாடு யில் 5ம், கீழ்ப்பாதியில் 5ம் வரும்.

2. குழுக்ளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால், அதற்கான சூத்திரம் (n + 1)÷2.

மேல்பாதிக்கானது இது.
உம் : 11 குழுக்களுக்கு : 11 + 1 = 12. = 6.
ஆக மேல்பாதி 6 குழுக்களைக் கொண்டதாக இருக்கும் கீழ்ப்பாதிக்கு சூத்திரம் : (n-1)÷2,
உம் : 11 குழுக்களுக்கு : 11-1 ÷ 10. = 5.
ஆக, மேல்பாதி 6. கீழ்ப்பாதி 5 என்று கொள்ள வேண்டும்.

சிறப்பு விலக்கு (Bye) கொடுக்கிறபோது, கடைப்பிடிக்க வேண்டிய முறை கீழே தரப்பட்டிருக்கிறது.

விலக்குக்கு இரட்டைப்படை எண்ணாக அணிகள் இருந்தால்

மேல்பாதிக்குத் தரவேண்டிய சூத்திரம் nb÷2.