பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


172 வல்லிக்கண்ணன் உயிர்த்துடிப்பைப் பொறுமையினை மேலும் நல்ல உளப்பணிவை ஒளியையெலாம் முறையாய் எங்கும் உயர்வுபெற நீ நிரப்பி விலங்குத் தன்மை ஓங்குவெறிச் சக்தியினை மனிதத் தன்மை நயமேவும் தாமரையாய் மாற்றி விட்டாய்! நனி ஆளப் படுகின்ற மக்களுக்கே அயராதே ஒத்துழைப்பைக் கற்பித்தாயே ஆட்சியுடைக் கொடும்பளுவை அகற்றிட்டாயே! வாழ்க நீ எம்மான்' எனும் பன்மொழிக் கவிதை களின் தொகுப்பு மகாத்மா காந்திஜிக்கு சூட்டப்பெற்ற அருமையான கவிதாஞ்சலி என்பதை அதைப் படிப்பவர் கள் உணர்வார்கள். புகழ்பெற்ற ருசியக் கவிஞரான தராசு செல்சென்கோ கவிதைகளையும் பெருங்கவிக்கோ தமிழாக்கியிருக்கிறார். செல்சென்கோவின் இறுதி உயில்’ என்ற கவிதையின் சில வரிகள் எடுத்துக்காட்டாக இங்கே தரப்படுகின்றன. 'இன்பத்தின் இருப்பிடம் என் இனிய உக்கிரேன்-தாய் மண்ணில் தன்பக்கம் உச்சியிலே சமாதி எனக்கமையுங்கள்! என்புதை அக்குழிமேடு இயற்கைவயல் சூழ்ந்த நீப்பர் நன்பக்கம் வெளியெல்லாம் நயனங்கள் காணட்டும்! நீப்பராற்றின் சலசலப்பின் முழக்கம் செவி கேட்கட்டும்!