பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 183 யளவும் நம் பணிகளை அறியவோ, உரிய மதிப்பளிக்கவோ முன் வருவதில்லை என்ற மனக்குறை கவிஞருக்கு இருக் கிறது, ஆயினும், பற்றில்லா உள்ளமும், இடையூறுகளை 6f6)6t) frist இடறி முன்னேறும் வேகமும் தாகமும், - துறவு மனப்பண்பும் தன்னல மறுப்பும்’ கொண்டிருப்பதால், கவிஞர் விரக்தியும் சோர்வும் அடையாது தொடர்ந்து கவிதைப் படைப்பிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவருடைய உழைப்பாற்றலும் செயலூக்கமும் தன்னம் பிக்கையும் போற்றுதலுக்குரியனவாகும். தமிழில் மரபுக்கவிதை செத்து விட்டது என்று குரல் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதை வளரவேயில்லை என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இரண்டுமே தவறான கணிப்புகள்தான் அப்படிச் சொல்கிறவர்கள் உண்மையைக் காணத் தவறிய வர்கள் காண மறுக்கிறவர்களுமாவர். - - - - - - - - மரபுக் கவிதை செத்து விடவில்லை; பாரதிக்குப் பிறகு தேங்கிக் கிடக்கவுமில்லை. விழிப்புடன் கவிதை உலகை, கவிதை பாடிய- பாடுகிற- திறமைசாலிகளை கவனித்தால் அவர்களே இந்த உண்மையை உணர முடியும். உணர்ச்சியும் உயிர்ப்பும், இயல்பான சொல் ஒட்டமும் கற்பனை வளமும், அழகும் ஆழமும் நிறைந்த கவிதைகள் படைத்த கவிஞர்கள் ஒவ்வொரு தலைமுறை. யிலும் தோன்றி, தங்கள் திறமையைக் காட்டும் விதத்தில் இனிய கவிதைகள் படைத்திருக்கிறார்கள். இப்பவும் மரபுக் கவிதையின் சிறப்பைப் புலப்படுத்தும் விதத்தில் நல்ல கவிதைகள் எழுதும் இளைய படைப்பாளிகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். திறமையைச்