பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மூன்உணரும் முன்னறிவு; விழிப்புணர்வு,சுறுசுறுப்பு: தேர்ந்த நெகிழ்ச்சி, துரிதமாக இயங்குதல், போன்ற வல்லமைகளை வளர்த்து விடுகின்றன.

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை 4 வகையாகப் பிரிக்கலாம்
1. நின்று நிலையாகச் செய்யும் பயிற்சிகள் (Static

gymnastics)

2. Goog Gouéolo Luisb%hoir (Dynamic gymnastics)
3. Graf 35moor Luosi,956;t (Light gymnastics)
4. Gugyoutraor Luo Sir (Heavy gymnastics)

1. நிலையாகச் செய்யும் பயிற்சிகள்

குழுவா ச் சேர்ந்து, கோபுரப்பயிற்சிகள் (Pyramids) செய்வதை, இதற்கு சான்றாகக் கூறலாம்.

ஒருவர் மேல் ஒருவர் நின்று அல்லது முதுகின்மேல் அமர்ந்து, அபபடியே படிப்படியாய் இருந்து, மனிதக் கோபுரம் கட்டுவது.

மிகவும் எச்சரிக்கையுடன், கருத்தான கவனத்துடன் இந்தப் பயிற்சிகளைக் கற்பிக்க வேண்டும்.

கற்பிக்கும் முறைகள்

1. கோபுரத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் கனமானவர்களாகவும்; மேலே அமர்பவர்கள் இலேசாக உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. கையூன்றி தலைகீழாக நிற்றல், தலையில் நிற்றல், வளைந்து ஹலாசனம் செய்தல் போன்ற திறமைகள் உள்ள மாணவர்களாகவும் தேர்ந்தெடுக்கவும்.