பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

1
2
3
4
5
6
7
8
1. இந்தப் போட்டித் தொடர் எப்பொழுது தொடங்கி, எப்பொழுது முடியும் என்பதைக் கட்டாயம் குறிப் பிட்டாக வேண்டும். (1 மாதம் அல்லது 8 மாதம். என்பதாக)
2. ஒரு ஆட்டக்காரர், தனக்கு மேல்தட்டில். உள்ள ஒரு ஆட்டக்காரருடன் தான், போட்டியிட வேண்டும். அல்லது மேல் வரிசையில் உள்ள 2. அல்லது 3 ஆட்டக்காரர்களையும். போட்டியிட அழைக்கலாம்.
உம் 6 வது ஆட்டக்காரர் 5 வது ஆட்டக்காரருடன் போட்டியிடலாம். அல்லது 4, 3 ம் எண் ஆட்டக்காரர்களையும் போட்டிக்கு. அழைக்கலாம்.
3. போட்டி நிரலின் படியே தான் ஆட வேண்டும் என்ற நியதியைக் கடைபிடிக்க்சு செய்யலாம்.
4. போட்டிக்கு அழைத்தால், ஓரிரு நாட்களுக்குள் அந்தப் போட்டி ஆட்டத்தை, ஆடி முடித்து விட வேண்டும்.

5. சவாலிட்டுத் தோற்றுப் போனவர், ஏணி போட்டி நிரவில், முன் இருந்த இடத்தை, மாற்றிக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தகுதிக்கேற்ப, வரிசையாகக் கொடுக்கப்பட்ட இடத்திலேயே இருந்து ஆட அனுமதிக்கலாம்.