பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

இப்பொழுது மேல்பாதியை இரண்டாகவும், கீழ்ப். பாதியை இரண்டாகவும் பிரித்தாக வேண்டும். அந்த அரைப்பாதி இரண்டாகப் பிரிகிற போது, கால் பகுதி (Quarter) என்ற பெயரைப் பெறுகிறது.

எனவே, இங்கு நான்கு கால்பகுதிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் 1, 2, 3, 4 என்று பெயரிடுவோம்.

ஒவ்வொரு கால்பகுதியிலும் 2 அணியாக 4 கால்பகுதியிலும் 8 அணிகள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு இடம் பெறுகிற சிறப்பிடம் பெற்ற அணிகள், கால் இறுதிப் போட்டியில் தான், வந்து போட்டியிடும்.

அப்படியென்றால், அரையிறுதிப் போட்டியில் 4 அணிகள், இறுதிப் போட்டியில் 2 அணிகள் என்று இடம் பெறும்.

இதற்கிடையில் சிறப்பிடங்கள் பெறுகிற குழுக்கள், முதல் சுற்றிலேயே தோற்றுப் போனாலும் போகலாம். அது வேறு விஷயம்.

நாம் சிறப்பிடம் தருவது என்பது தான், இங்கே முக்கியமானதாகும்.

அந்த சிறப்பிடம் தருகிற முறையை, கீழ்க்காணும் முறைப்படி தரலாம்.