பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


2. அதிகத் திறமையுள்ளவர்கள் திறமையுள்ளவர்கள், திறமை குறைந்தவர்கள் என்று மூன்று பிரிவுகளாக்கி, குழுக் களைப் பிரிக்கலாம்.

3. விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் அதிகம் இருந்து, விடுதிகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால், விடுதிகளுக் கிடையே போட்டிகள் என்று நடத்தலாம்.

4. விடுதிகள், வீட்டிலிருந்து வருபவர்கள், இப்படியும் போட்டிகள் நடத்தலாம். விடுதிகள் பல இருப்பதால், அந்தந்த விடுதி ஒரு குழுவாகும். வீட்டிலிருந்து வருபவர்களை, அந்தந்த ஏரியா பார்த்துப் பிரித்து, பல குழுக்களாக்கியும் போட்டியிட வைக்கலாம்.

5. விடுதிகள் இல்லாத பள்ளிகள், நிறுவனங்களில், வகுப்பு வாரியாகப் பிரிக்கலாம் : சிறுவர், இளையோர். மூத்தவர் என்றும் பாகுபடுத்தலாம்.

6 . கல்லூரியாக இருந்தால், துறை வாரியாகப் (Department) பிரித்து, போட்டிகள் நடத்தலாம்.

இப்படிப்பட்ட போட்டிகளை நடத்திட, அதையும் வெற்றிகரமாக நடத்திட, அதற்கென்று நிர்வாகக் குழு