பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. கற்பிக்க உதவும் முறைகள்
(METHODS OF TEACHING PHYSICAL ACTIVITIES)

முறையின் நிறை

ஒரு பாடத்தைக் கற்பிக்கிற போது, ஏதாவது ஒரு . கற்பிக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

சிறப்பாகக் கற்பிக்க, திட்டவட்டமான, தீர்மானமான முறை ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், கற்பிக்கும் முயற்சிகள் வீணாகிப் போய்விடும்.

சரியான கற்பிக்கும் முறையைக் கைக் கொண்டு விட்டால், அது கற்கும் செயலைக் கனிவாக்கிவிடும். ஆசிரியரின் அறிய முயற்சியும் பலனளிக்கும். முழுப்பாடத் திட்டத்தையும் முடித்து வைக்கும் நேரம் தந்து, நினைவை நிறைவேற்றி வைக்கும் சரியான பாடத்திட்டம், முறையாக நடக்கவும், மாணவர்களை உற்சாகப்படுத்தவும், செய்து மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த அடிப்படையைக் கொண்டே, ஆய்வறிஞர்கள் முயற்சி பல மேற்கொண்டு, கற்பிக்கும் முறைகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

ஆகவே, பாடத்திட்டத்திற்கேற்ப; மாணவர்களுக் கேற்ப, முகிழ்த்து வரும் சூழ்நிலைகளுக்கேற்ப, கற்பிக்கும்