பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கைகளை பக்கவாட்டிலிருந்து, தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு பக்கவாட்டில் கொண்டு வந்து, தொங்கவிடு. என்பது தான் பயிற்சி.

இந்தப் பயிற்சியை 12345678 என்று எண்ணத் தொடங்கி

87654321 என்று நிறுத்து.

இவ்வாறு விளக்கி, நேரம் தந்து, செயலைத் தொடங்கிச் செய்யக் கற்றுத்தந்த பிறகு, அடுத்ததாக, தொடர்ந்து செய்யுங்கள் என்று கட்டளை இடவும்.

அதை இப்படி ஆங்கிலத்தில் கூற வேண்டும்.
Continuously and Rhythmically, class... Begin

தொடங்கு என்று சொல்லிய உடனேயே, முன் விளக்கியது போல 12345678 என்று மேல் நோக்கி எண்ணி, பிறகு கீழ்நோக்கி இறக்கிக் கொண்டுவரவும்.

இறக்கிவருகிற போது 43 என்று வந்தவுடன், பயிற்சியை மாற்ற வேண்டுமானால், பயிற்சியை - மாற்று (Exercise change) என்று மாற்றிக் கூறவேண்டும்.

பயிற்சியை நிறுத்திட வேண்டுமானால், 8லிருந்து இறக்கிக் கொண்டுவந்து 4, 3 என்று வந்தவுடன், பயிற்சியை நிறுத்து (Class Halt) என்று கூறி நிறுத்த வேண்டும்.

876543 பயிற்சியை நிறுத்து என்று இரண்டு எண்ணிக் கையில் பயிற்சியை நிறுத்துவது தான் சிறந்த முறை என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பயிற்சிகளை மாற்ற நேரிடும்போது, Next change என்றும் (அடுத்ததற்கு மாற்று); வலப்புறம் வகுப்பைத் திருப்பி பயிற்சியைச் செய்யச் சொல்கிற போது (Right-change) வலப்புறம் மாற்று என்றும்.