பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185


12. குழுப் போட்டிகள் (Group Competitions)

உடற்கல்விப் பாட வகுப்புகளில், பல்வேறு விதமான, உடல் இயக்கச் செயல்கள், அடிப்படைத் திறமைகளுடன் விளக்கம் தந்து கற்பிக்கப் படுகின்றன.

ஆர்வமுடன் அவற்றைக் கற்றுக் கொள்கிற மாணவர்கள் பயிற்சிகணைத் திறம்படச் செய்து, திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

வளர்த்துக் கொண்ட திறமைகளை, மற்றவர்களுடன் போட்டியிட்டுத் தெரிந்து கொள்ளவும், மேலும் மேலும் திறமைகனை வளர்த்துக் கொள்ளவும் கூடிய வாய்ப்புகளை, குழுப் போட்டிகள் கொடுக்கின்றன.

அதற்குரிய வாய்ப்புக்ளாக அமைவன-வகுப்புகளுக் கிடையே போட்டிகள். மாணவர் பிரிவுகளுக்கிடையே போட்டிகள் ஆகும்.

குழுப் போட்டிகளில் கிடைக்கும் நன்மைகள்

1. குழுப் போட்டிகள், மாணவர்களிடையே ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஊட்டி வளர்க்கின்றன.

2. பங்கு பெற வேண்டும் என்று மாணவர்களின் விருப்பம் மேலும் விரிவடைகிறது. வேகம் கொள்கிறது.

-12