பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

 2. வட்டமுறை, அட்டவணைமுறை இவைகளைப் போல, தயாரித்துள்ள படிக்கட்டுப் போட்டி நிரல் முறையில், எந்தெந்த நாட்களில் எந்தெந்தக் குழுக்கள் போட்டியிட வேண்டும் என்பதை எளிதில் குறித்துக் காட்டவும் இயலாது.

3. பந்தயத்தில் கலந்து கொள்கிற குழுக்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருந்தால், எந்தெந்த சுற்றில் (Round) எந்தெந்தக் குழுவிற்கு சிறப்பிடம் அளித்து விலக்களிக்க (Bye) வேண்டும், என்பதையும் அறிந்து கொள்ள இயலாது.

தொடர் வாய்ப்புப் பந்தயத்தில், வெற்றிக் குழுவைத் தீர்மானிக்கும் முறை (To decide the winners)

1 போட்டி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் -
                                                2 வெற்றி எண்கள்
1 போட்டி ஆட்டத்தில் தோற்று விட்டால் -
                                                1 வெற்றி எண்
குழுவும் சமநிலை (Tie) அடைந்தால் -
                                                1 வெற்றி எண்

போட்டித் தொடரில், அதிகமான வெற்றி எண்களைப் பெறுகிற குழுவே, வெற்றி பெற்றது என்று அறிவிக்க வேண்டும்.

வெற்றி எண்கள் விகிதத்தில், இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்கள் சமநிலை பெற்றிருந்தால், அந்தத் தடையைத் தீர்த்து, வெற்றிக்குழு எதுவென்று