பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

1. நிறுவனத்தின் தன்மை (மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிறுவனமா, வீட்டிலிருந்து வருபவர்களா என்பதற்கேற்ப).

2. நிறுவனம் இருக்கும் இடத்தின் தட்ப வெப்ப அமைப்பு.

3. இருக்கின்ற வசதிகள் (ஆடுகளங்கள் உதவிப் பொருட்கள், உதவியாளர்கள் முதலியன).

4. பொருளாதார வசதி.

5. போட்டிகள் நடத்தக் கிடைக்கும் நேரம்

6. மாணவர்கள் பெரிதும் விரும்பிப் பங்கேற்கும் விளையாட்டுகள்.

7. சக ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி

போட்டிகளுக்காகப் குழு பிரித்தல்

1. மாணவர்களை , அவரவர்கள் திறமைக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்ப, பல பிரிவுகளாகப் பிரித்து போட்டியிடச் செய்யலாம்.