பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த் அருங்கவிஞர் 0.125 பண்ணார்ந்த இசை யமுதின் பயன்கேளாச் - - செவியினைப் போல் கண்ணின் ஒளியை நம் கையால் மறைப்பது போல் களிபேருவகைக் கவித் துவத்தைச் செம்பொருளை உலக உலா வலம் வரவே ஓங்குவிக்கும் செயலின்றி சில சொல்லி நமக்குள்ளே திறம் பேசி ஏமாந்தோம்." இற்றை நாள் தமிழரின் இனிய சமுதாயம் காய்ந்து மயங்கி கனியிழந்து போய்விட்டது அதனை பேரறிஞர் கள் ஆய்ந்து அறிந்த போதிலும் இந்த இழிநிலைக்காக வருந்தவில்லை என்ற உண்மையை கவிஞர் சுட்டிக்காட்டு கிறார். ஓரிடத்தில்- தமிழர் சமுதாயத்தின் காய்ந்த நிலைக்கு ஏற்ற ஒரு உவமையைப் பொருத்தியிருக்கிறார் அங்கே, - 'பூத்துக் கிடந்த பொய்கை ஒர்நாளில் காத்துக் கிடந்த கரவுடையான் உள்ளம்போல் வற்றி வறண்டு வளம்குன்றிப் போனதுபோல்’ என்று. . மனிதரின் நிலைக்கும் செயலுக்கும் இயற்கையை, அதன் போக்குகளை. உவமை ஆக்குவது போல, இயற்கை யின் செயல்பாடுகளுக்கு மாந்தரின் இயல்புகளையும் செயல்களை யும் கவிஞர் உவமித்துக் கூறுவது சுவைத்து இன்புறத் தக்கது ஆகும். 'ஈனம் செய்தவர் நெஞ்சு போல்-தீய எண்ணம் கொண்டவர் துஞ்சல் போல் மானம் இழந்தவர் வாழ்வு போல்-எங்கும் வந்து சூழ்ந்திடும் மேகமே” என்பக கவிகை