பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தினால் உனக்கு நன்றி கூடச் சொல்லாமல் அவசரமாக வந்துவிட்டேன்," என்றது குதிரை.

"அதைப்பற்றி இப்பொழுது பேசவேண்டாம், அண்ணே . நான் பட்டணம் பார்க்க வேண்டும்" என்றது கழுதை.

"முதலில் நான் தின்னும் காகிதத்தை ருசி பார். பிறகு பட்டணம் பார்க்கலாம்" என்று குதிரை பெருமையாகத் தன் தீனியைப் பற்றிப் பேசிற்று. இந்த உணவு, காட்டில் கிடைக்குமா?

"எனக்குக் காகிதம் தின்று பழக்கமில்லை. பச்சைப்புல் தான் பிடிக்கும். இருந்தாலும் நீ ஆசையாகக் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லலாமா?" என்று கூறி விட்டுக் கடக்கிட்டி முடக்கிட்டி சுவரொட்டிக் காகிதத்தை வாயில் வைத்தது.

ஏதோ ஒரு நாற்றமெடுத்த பசையை அதில் தடவிச் சுவரில் ஒட்டியிருந்தார்கள். கடக்கிட்டி முடக்கிட்டிக்கு அது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரே குமட்டலாக வந்தது. "அண்ணே, இதுதானா உங்கள் பட்டணத்து விருந்து?" என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அது கேட்டது.

அந்தச் சமயத்தில் சுவரொட்டி ஒட்டுகின்ற சிறுவர்கள் மூன்று பேர் அங்கு வந்து சேர்ந்தார்கள். "இந்தக் கிழட்டுக்குதிரை நாம் ஒட்டுவதையெல்லாம் தின்றுவிடுகிறது. இதைக்