பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கழுதையின் பெரிய சத்தத்தையும் கேட்கவே புலி, ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடியே போயிற்று.

இந்தப் புலிக்கு ஒரு குள்ள நரி மந்திரியாக இருந்தது. அது குதிரையையும் கழுதையையும் பல தடவை பார்த்திருக்கிறது. அதனால் அது பயந்தோடி வந்த புலியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. சிரித்துவிட்டு அது, “ஒரு கிழட்டுக் குதிரைக்கும், கழுதைக்கும் பயப்படுகின்ற புலியை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு கோழையான புலிக்கு மந்திரியாக இருப்பது எனக்கே பெரிய அவமானம்” என்றது.

“எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சுலபமாக அவற்றைக் கொல்ல முடியும் என்றால் என் மேலே பாய்வது போல அவை வேகமாக வருமா?” என்று கேட்டது புலி.

“புலியாரே, உங்களால் ஒரே அடியில் அவை இரண்டையும் அடித்துக் கொல்ல முடியும். சந்தேகமே வேண்டாம். உடனே புறப்படுங்கள்” என்று குள்ள நரி தைரியம் சொன்னது.

“நீ என்னை அந்த விலங்குகளிடம் சிக்க வைக்கப் பார்க்கிறாய். நான் போக மாட்டேன்” என்று புலி சந்தேகத்தோடு உருமிற்று.

“என்மேல் உங்களுக்குச் சந்தேகமா? வேண்டுமானால் என்னுடைய வாலையும் உங்களுடைய வாலையும் கெட்டியாக முடிந்துகொள்