பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதாவது, இதை ஒரு கணக்காகக் கூறினால் உங்களுக்குப் புரியும். உங்கள் உடலில் உள்ள திறமை அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உடற்பயிற்சி செய்கின்றவர்கள், அதில் 56% திறமையை வெளிப் படுத்துகின்றார்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள் 27% தான் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இப்படி மிகவும் கீழ்த்தரமாக, உடல் திறமையை இழக்கின்ற கொடுமை, தேர்ச்சி பெறாத தேகத்தில் தான் நடைபெறுகிறது. இருக்கின்ற திறமையை, இன்னும் எடுப்பாக, முழுதாகப் பயன்படுத்துபவர் யார் என்றால், உடற்பயிற்சி செய்பவர்களே என்ற உண்மையை, உலகத்து மக்களுக்கு விஞ்ஞானிகளே வெளிப்படுத்திக் காட்டி விட்டனர். தினந்தினம்: ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஏற்படுகிற சோதனைகளையும், அவைகள் விளைவிக்கின்ற வேதனைகளையும், விரட்டியடித்து வெற்றிகானும் வேகத்தையும், விவேகத்தையும், உடற் பயிற்சிகளே அளிக்கின்றன. உடலின் ஆற்றலையும் வெகுவாக உயர்த்துகின்றன. அதிகமான வேலையை குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதும், வேலைக்குப் பிறகு அதிக நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வதும்தான், திறமையான தேகத்தின் நுட்பமான இயக்கமாகும்.