பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கொண்டுவந்து நிறுத்தி, பிறகு மீண்டும் முன்புறமாக மேலே உயர்த்தி, பழைய நிலைக்கு வரவும் (10 தடவை). 2. இடுப்பில் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நிற்கவும். பிறகு, வலது காலை பின்புறமாகக் கொண்டுபோய், பாதத்தின் முன்புறம், தரையைப் பார்ப்பதுபோல் வைத்து, இடது காலில் நிற்கவும். . . . .” --> - 1 E+" ra- : * o பிறகு, முன்நிலைக்கு வந்ததும், இடது காலில் செய்யவும், மூச்சை இழுத்துக்கொண்டு பயிற்சியைத் தொடங்கி, பயிற்சி முடிகிற போது மூச்சை வெளியே விடவும். - (3.அ) இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நிற்கவும். பிறகு இடது காலை முழங்கால் படிய வளைத்துத் தூக்கி, பின்னர் இடது காலை விரைப்பாக பக்கவாட்டில் உயர்த்தவும்.