பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பெல்ட்டை எடுத்து, எந்த இடத்தில் கொழுப்புப் பகுதி அதிகம் இருந்து, துருத்திக் கொண்டு காட்டுகிறதோ, அந்த இடத்தில் வைத்துக்கொண்டு, எந்திரத்தை ஓடவிட்டால் போதும். பெல்ட்டும் மெஷினுக்கும் உடம்புக்குமாக சுற்றிச் சுற்றி வந்து, அதிர்ந்தபடி, உடலில் உள்ள வேண்டாத கொழுப்பைக் கரைக்கும். தேவையான நேரம் அப்படியே நின்று விட்டு, தேகத்தைப் பெல்ட்டுக்குத் தந்துவிட்டு, உடற்பயிற்சி செய்தாகிவிட்டது என்ற உள்ளத்தின் திருப்தியுடன் வந்து விடுவார்கள். ஆனால் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன? உடலில் உள்ள உணவுச் சத்தான கலோரிகளின் அளவு செலவழிக்கப்படுவதில்லை. கொழுப்புத் திசுக்கள் சேதமாக்கப் பட்டு அழிக்கப்படுவதுமில்லை. அந்த வேண்டாத கொழுப்புப் பகுதிகளின் வெளியீடுகள் அமுங்கிப் போய் விடுவதுமில்லை. நாட்கள் தான் கழியுமே தவிர, நல்ல உடல் அமையாது என்பது நடைமுறையை உணர்ந்தவர்களின் கூற்று. 2-வது படத்தைப் பாருங்கள். எந்த இடத்தில் அதிகமாக எடைக் கொழுப்புப் பகுதி இருக்கிறதோ, அந்த இடத்தில், எடை உடைகளை (Garments) மாட்டி விடுவார்கள். அந்த வெப்பமான, இறுக்கமான சூழ்நிலையில், உடல் வியர்த்து, உடலில் உள்ள தண்ணிரின் அளவை வியர்வையாக்கிக் குறைக்கும்.