பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா சேர்ந்தாற்போல் உயரே தூக்கி கீழிறக்க வேண்டும். (15தடவை) (3) பலகையில் (Bench) மல்லாந்து படுத்திருந்து, மார்பில் எடைக் குண்டுடன் ஒரு கை இருக்க, மறுகை மார்புக்கு மேலே உயர்த்திட வேண்டும். பிறகு மறுகையையும் தொடர்ந்து செய்திட வேண்டும். (15தடவை) - - (4) மல்லாந்து பலகையில் படுத்தவாறு, மார்பில் முன்போல் இருக்கும் கைகளை சேர்த்தாற் போல் மேலே உயர்த்திக் கீழே இறக்கிட வேண்டும். (25 தடவை). (5) மல்லாந்து பலகையில் படுத்திருந்து, மார்பின் மேலிருக்கும் கைகளிலுள்ள எடைக் குண்டை, பக்கவாட்டில் நீள விரித்து (முடிந்தவரை முழங்கை வளையாமல்) செய்ய வேண்டும். மார்பு விரிந்து முன்கை வலிக்கும்வரை செய்தபின் கைகளை கீழே இறக்கலாம். இப்பயிற்சிகளால் மார்பு, முன் கைத் தசைகள் பயன் பெறுகின்றன. - (6) கால்களை அகல விரித்துத் தொடையில் விழுவது போல் கைகளைத் தொடங்கவிட்டுக் கொண்டு நின்று, எடைக் குண்டைத் தலைக்கு மேலே முடிந்த அளவு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து மெதுவாகக் கீழே இறக்கிச் செய்யவும். (7) கால்களை அகலவிரித்து, கைகளை பக்கவாட்டில் அகலப் பரப்பி வைத்து, உள்ளங்கை