பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 117 ஒவ்வொரு கையாக மாற்றி மாற்றி இறக்கலாம். இரண்டு கைகளையும் சேர்த்தாற்போல் (அடுத்த பயிற்சியாக) ஏற்றி இறக்கிச் செய்யலாம். இப்பயிற்சியை நிமிர்ந்து நின்று கொண்டு செய்யலாம். ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டும் செய்யலாம். குதிகால் தரையில்படும்படி உட்கார்ந்து செய்யலாம். பயிற்சிக்கு உடலின் மற்ற பாகங்கள் உதவாமல், கைவலிமையிலேயே செய்யவேண்டும். பின்கைத் தசைகளுக்கும் மிகவும் நல்லது. (10) ஒரு பலகையில் அல்லது முக்காலியில் உட்கார்ந்து காலை அகலமாகவும், கொஞ்சம் குனிந்தவாறும் உட்கார்ந்து, கால்களுக்கிடையிலிருந்து ஒரு எடைக்குண்டை வைத்திருக்கும் கையைத் தூக்கி, மடக்கி மார்புக்கு முன் உள்ள தோளுயரத்திற்குக் கொண்டு வரவேண்டும். கையை உயர்த்தும்போது, இடுப்பும் முதுகும் சிறிது வளைந்திருத்தல் நல்லது. (11) முன் பயிற்சிபோலவே உட்கார்ந்து, கால்களை அகலமாக வைத்து, இடுப்பை கால்களுக்கு இணையாக வளைத்துக் குனிந்து, எடைக் குண்டுகளுடன் கைகளைத் தொங்கவிட்டிருக்க வேண்டும். பிறகு வலக்கையை மடித்து இடதுகைத் தோளுக்கு உயர்த்த வேண்டும். அது போல மறு கையாலும், மாறி மாறிச் செய்தல் நல்லது. சிறிது கடினமாக இருந்தாலும் சிரமம் பாராது செய்ய வேண்டும்.