பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.42– டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வாழ்வின் வளம், நலம், பலம், திடம், தேர்ச்சி போன்றவைகள், நாற்பது வயது வரும்போது வளர்கிறதோ என்னவோ, வயிறு மட்டும் நன்கு முன்புறமாக வளர்ந்து, பக்க வாட்டில் விரிந்து, பார்வைக்குக் கம்பீரமாகப் புலப் படுகின்றது. ஒருவரது முகத்தைப் பார்ப்பதற்கு முன், இதோ, நான் முன்னாடியிருக்கிறேன், என்னைப் பாருங்கள் என்று வயிறு தான், வரிந்து கட்டிக் கொண்டு அமைகிறது என்றால், அதன் வளர்ச்சியை, கிளர்ச்சியைப் பாருங்கள். வேண்டாத வயிற்றைத் தான், தொந்தி, தொப்பை என்று கேலி செய்கிறோம். பெரிய வயிறு என்றால், பானை வயிறு என்கிறோம். குப்புறப் படுப்பதற்குக் கஷடம் என்றால், நடக்க, ஒட நிற்க, செயலாற்ற, சிரமமும் அதில் அதிகம் தான். நாற்பது வயதுக்காரர்கள் இதை நினைத்துப் பார்த்து. வயிற்றை அடக்கி விட்டால், சரி சமமாக்கிக் கொண்டு விட்டால், இதயத்தில் இளமை உணர்வும், செயலில் இளமை தினவும், நடையில் இளமைத் திமிரும் செழித்தோங்கியல்லவா கிடக்கும்! வயிற்றை அடக்கும் வேலையானது, குதித்துக் கொண்டு வரும் காளையை அடக்குவது போலத் தான் என்று கருதி, ஒதுங்குவோரும் உண்டு. ஆமாம், உடற்பயிற்சி செய்வதை அப்படித்தான் எண்ணிப் பலர் அரண்டு போகின்றார்கள்.