பக்கம்:ஆண் சிங்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்

"ஹை...த்தா’ என்று உறுமினான். வலத்தன் காளை எதையோ கண்டு பயந்ததுபோல கலைந்தது.

‘மாடசாமி! ரோட்டோரமாக யாரும் நின்று விட்டு, வண்டியைக் கடக்க ரோட்டைத் தாண்டிக் குறுக்கே போறாகளோ?’ என்று கேட்டார் பிள்ளை. அவர் தேகம் கூட்ப் புல்லரித்தது. ‘எழவு பனிவாடை என்னமாத் தானிருக்கு’ என்று முனங்கிக் கொண்டார்.

மாடசாமி மனசுக்கு நன்ருகத் தெரியும். அது ஆள் அல்ல. சாமிதான். ஆமாம். சாலைக்கரைத் தெய்வம். ‘சாமி, நீதான் காப்பாத்தனும் என்று மனமாற வேண்டியபடி, மாடுகளின் வாலை முறுக்கினன்.

‘ஏஏய்! எதிரே மோட்டாரு வாறாப்லே தோணுதே’ என்றார் பிள்ளை. எதிரே கண்ணெறிந்த மாடசாமி ‘அப்படித் தெரியலியே. வெளிச்சமே காணோம்’ என்றான்.

‘பின்னே? பளிச்னு வெளிச்சமடிச்சுதே, நல்லாக் கவனிச்சு ஒட்டு. அந்த வளைசலிலே கண்டாத் திரும்பி யிருக்கோ என்னமோ...சே, இது சீன்ட்ரம் புடிச்ச இடமாகல்லா யிருக்கு...வலத்தனை ஜாக்கிரதையாகக் கவனிச்சுக்கோ. கழுதை மிரளப் போவுது.’

வண்டிக்காரனுக்கு வியப்பும் திகைப்பும். மோட்டார் லைட் ஒளியோ, சத்தமோ இல்லை. ஐயா மோட்டார், மோட்டார் என்கிறார்களே! அவனுக்குப் புரியவில்லை.

ஆலமரத்திலே குடியிருந்த கொக்கு இசைகேடாகக் கிளையில் நழுவியதனாலோ தூக்கம் கலைந்து விட்ட தாலோ, சிறகைப் படபடக்க வைத்து, கரகரத்த குரலில் ‘ஹர்ராங்’ என்று விசித்திரமாக ஒருதரம் கத்தியது. இரவின் ஆழத்திலே அமைதியின் கொலுவிலே, அந்த ஒற்றைக் குரல்கூடக் கோரமாகத்தான் ஒலித்தது.

மாடுகள் இக்கட்டான திருப்பத்தை–ஆலமர அடியை– நெருங்கிக் கொண்டிருந்தன.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/19&oldid=1071126" இலிருந்து மீள்விக்கப்பட்டது