பக்கம்:ஆதி அத்தி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆதி அத்தி ளத்திலே நீந்தியிருக்கிறேன். இது எனக்குப் பெரிதல்லநான் புறப்படட்டுமா? (நீரில் இறங்கத் தொடங்குகிருன்.) ஆதிமந்தி (சற்றுக் கவலையோடு) . எனது தாயும் தந்தையும் இங்கே வருவதாகச் சொன்னர்களே-அவர் கள் வரும் வரையில் சற்றுப் பொறுங்கள். அத்தி (சிரித்துக்கொண்டே) : அவர்கள் வந்தா லும் கரையிலே உன்னேடுதானே இருக்கப்போகிருர்கள்? நீ வீணுகக் கவலைப்படாதே. அவர்கள் வந்த பிறகும் சில வித்தைகள் காட்டு கிறேன். (நீரில் இறங்குகிருன்.) ஆதிமந்தி சற்றுக் கரை அருகிலேயே விளையாடி ஞல் எல்லோரும் பார்க்க முடியும். அத்தி , சரி, ஆதி. அப்படியே விளையாடுகிறேன். நீ ஒரு பாட்டுப் பாடு. அது கேட்கிற தூரத்திலே நான் நீர் விளையாடுகிறேன். (ஆதிமந்தி பாடத் தொடங்குகிருள். அத்தி வெள்ளத்தினுள் பாய்கிருன். மக்கள் பலர் ஆச்சரியத்தோடு பார்த்து நிற்கிருர்கள்.) ஆதிமந்தி : (பாட்டு) பல்லவி இணையில்லாத புகழ் நாடு எங்கள் சோழ நாடு அனுபல்லவி துணையுடன் கூடி யன்னம் துயிலும் தன்பணை நாடு சோழர் தம்கொடி யென்றும் ஓங்க கின்றிடும் காடு-(இணை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/50&oldid=742439" இலிருந்து மீள்விக்கப்பட்டது