பக்கம்:ஆதி அத்தி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆதி அத்தி ஆதிமந்தி : நான் அப்படிச் சொல்லவில்லையே? உங்கள் நாட்டு மலையருவியைப் பற்றி நீங்கள் பெருமை யாகப் பேசினர்கள். எங்கள் நாட்டுக் காவிரியின் பெரு மையை நான் பேசினன். அத்தி : இருந்தாலும் உன் உள்ளத்திலே இருக்கிற எண்ணத்தை நான் அறியாமலில்லை. உனக்கு எதற்காக இப்படிச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது? நாம் கூடி வாழ்ந்து வந்துள்ள இந்த நான்கு மாதங்களிலே என் மனம் வேறுபட்டதை என்ருவது நீ அறிந்தாயா? ஆதிமந்தி (அமைதியாக) : ஒருநாளும் கிடையாது. என்னுடைய பேச்சு அப்படி ஏதாவது குறிப்பிடுவதாக உங்களுக்குத் தோன்றினல் தயவுசெய்து ar6ঠr&rে மன்னித்து விடுங்கள். அத்தி (ஆதிமந்தியைத் தன் னருகே இழுத்துக் கொண்டு, அன்பு ததும்பும் குரலில்) : ஆதி, உன்னை மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? எனது அளவு கடந்த காதலை உணராமல் பேசுவதாக நினைத்துத்தான் கொஞ்சம் பொறுமை இழந்தது போலானேன். ஆதிமந்தி : நீங்கள் என்னை உங்கள் அன்பு வெள் ளத்திலே திளைக்கச் செய்துகொண்டிருக்கிறீர்கள்-அதை நான் உணராமல் இல்லை; அதை முற்றிலும் உணர்ந்து தான் எனக்குப் பயமும் ஏற்பட்டிருக்கிறது. அத்தி : பயம்? எதற்குப் பயம்? ஆதிமந்தி இவ்வளவு ஆழ்ந்த காதல் என்றும் இப்படியே இருக்க வேண்டுமே என்றுதான் காட்டாற்று வெள்ளம்போலப் பொங்கிப் பெருகுகின்ற காதலைக் கண்டால் பெண்ணின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தாலும் பயமும் கொள்ளுகிறது) அதனால்தான் எனக்குக் காவிரி பின் நினைப்பு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/29&oldid=742415" இலிருந்து மீள்விக்கப்பட்டது