பக்கம்:ஆதி அத்தி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 13 கரிகாலன் : அமைச்சரே, நீங்கள் கூறுவது மெய் தான். குடிகளோடு இப்படிப்பட்ட விழாக்காலங்களில் கலந்து பழகுவதால் அவர்களுடைய இன்பதுன்பங்களே அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. அவர் கள் நமது ஆட்சியைப்பற்றி என்ன நினைக்கிருர்களென் பதையும் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆதலால் இந்த விழாவை இந்த ஆண்டு இன்னும் சிறந்த முறை யில் கொண்டாடுவதற்கு இப்பொழுதிருந்தே ஏற்பாடு களைத் தொடங்க வேண்டும். அமைச்சர் : வேந்தே, புதுப்புனல் விழாவிற்கு இன்னும் ஐந்து மாதங்களிருக்கின்றன. ஆனல் இப் பொழுதே இசையரங்குகள் முதலியன அமைக்கத் தொடங்கியிருக்கிருர்கள். கரிகாலன் : வெவ்வேறு வகையான பண்டங்களை விற்பதற்குத் தனித்தனி அங்காடிப்பகுதிகளை ஏற்படுத்து வதோடு முக்கியமாகக் கலைஞர்கள் தங்கள் கலைப்பொருள் களைப் பிறருக்குக் காட்டவும் விற்கவும் நல்ல வசதிகள் செய்ய வேண்டும்; பலவகையான கலைநிகழ்ச்சிகள் நடக் கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அமைச்சர் : இந்த விழா கலை விழாவாகவே அமைய வேண்டுமென்று தாங்கள் விரும்புவதை மக்க ளும் அறிந்திருக்கிருர்கள். கரிகாலன் : ஆம், கலையை வளர்ப்பதற்கு இதுவும் ஒரு சந்தர்ப்பமாக அமைய வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன். அதேைலயே எனது மகள் ஆதிமந்தி யையும் இவ்விழாவிலே நாட்டியம் ஆடும்படி ஏற்பாடு செய்தேன். சேனபதி : சோழவேந்தர்கள் கலையைப் பெரிதும் ஆதரிப்பவர்கள் என்பதை நம் நாட்டில் மட்டுமல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/14&oldid=742400" இலிருந்து மீள்விக்கப்பட்டது