பக்கம்:ஆதி அத்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி முதல் அங்கம் காட்சி ஒன்று (சோழ அரசர்களின் தலைநகராகிய உறையூரிலே ஒரு நாள் காலை நேரம். மணி பத்திருக்கலாம். சோழன் கரிகாற் பெருவளத்தான் அரசவையில் தனது அமைச்சர் சேனுபதி ஆகிய இருவருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கிருன். கரிகாலனுக்கு ஐம்பது வயதிருக்கலாம். பல போர்களில் வெற்றி பெற்ற் தில்ை ஏற்பட்ட கண்ணியமும், கலைப்பண்பால் ஏற் பட்ட அமைதியும் அவனிடத்தே நன்கு தோன்று கின்றன. அமைச்சரும் சேபைதியும் அவனுக்கு வயதில் சற்று மூத்தே தோன்றுகின்றனர்.) சேனாபதி (எழுந்து நின்று அரசனைப் பார்த்து): கரிகாற் பெருவளத்து வேந்தரே, தாங்கள் நேற்று அனுப்பிய ஆணையொன்றின் பொருள் எனக்கு விளங்க வில்லை. அதை அறிந்துகொள்ள நான் பெரிதும் ஆசைப் படுகிறேன். கரிகாலன்: எதைப்பற்றிக் கேட்கிறீர்கள், சேன பதி? சேளுபதி : தாங்கள் தமிழ்நாட்டு முடியுடை வேந்தர்களான பாண்டியனையும், சேரனயும் அவர் களோடு சேர்த்து வேளிர் தலைவர்களையும் வென்றதோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/10&oldid=742391" இலிருந்து மீள்விக்கப்பட்டது