பக்கம்:இரு விலங்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அவர் இறையரு ளநுபவத்தில் ஆழ்ந்தவர்; ஆனால் குழந்தைபோன்ற எளிமை யுள்ளவர். எதிலும் ஒளிவு மறை வின்றிப் பேசுகிறவர். நாம் எதைக் கேட்டாலும் தெரிந் தால் தெளிவாகச் சொல்வார். தெரியாவிட்டால் தெரி யாது என்று நேர்மையாகச் சொல்வார். ப ல கா ல ம் தவத்தில் ஈடுபட்டு அநுபவம் பெற்று அதனால் தெளிவுடைய வராக விளங்குகிறார் அவர்,

அவருக்குப் பெரிய செல்வர்களும் நண்பர்கள்; ஏழை களும் நண்பர்கள். ந ன் றா க ப் படித்த பேரறிஞர்களும் அவரை மதிப்பார்கள்; கல்வி யறிவில்லாத பாமரரும் அவர் பால் அன்பு பாராட்டுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஞானியருக்கும் பெரியவர்களுக்கும் அ வ  ரை த் தெரியும். 
 
 அவருடன் பலகாலமாகப் பழகும் பேறு எளியேனுக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் பணிந்து மணிக்கணக்காக அவருடன் அளவளாவி யிருக்கிறேன். பழைய பாடல் களானாலும் புதிய பாடல்களானாலும் நல்லனவாக இருந் தால் அவற்றில் சொக்கிப் போவார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் அவருக்காக இரண்டு கீர்த் தனங்கள் பாடியிருக்கிருர்.
 பழைய பாடல்களாகிய தேவார திருவாசகங்களையும் திவ்யப்பிரபந்தத்தையும் கேட்டு இன்புறும் அவர் அருணகிரி நாதர் திருவாக்கில் மிகுதியாக ஈடுபடுவார். அருணகிரியார் பெரிய அநுபூதிமான் என்பதை அடிக்கடி சொல்லிக் காட்டு வார். அநுபவ உலகில் சஞ்சரிப்பவர்களுக்குத்தான் இந்த உண்மை தெரியவரும் இலக்கியக் கண் கொண்டும் சமய நூலறிவுக் கண் கொண்டும் அவர் திருவாக்கைப் பார்ப் பவர்கள் பலர் உண்டு. அந்தத் துறைகளில் அருணகிரி நாதரைவிடச் சிறப்பாகப் பாடிய பெரியவர்கள் இருக் கிறார்கள். ஆனால் இறையருளநுபவம் பெற்று அதன் பயனாக உண்டான உள்ளக் களிப்பில் மிதந்து பாடியவர்கள் மிகச் சிலரே, அருணகிரிநாதர் அவ்வாறு பாடியவர்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/7&oldid=1296533" இலிருந்து மீள்விக்கப்பட்டது