பக்கம்:ஆண் சிங்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

மாடுகளை இழுத்துப் பிடிக்க முயன்றான் மாடசாமி. அவ்வேளையில் ‘த்தா...இந்தாலே’ என்ற அதட்டல் கேட்டது.

‘ஏஏ...மடையா, இப்பவா அதட்டது?’ என்று சீறி ஞர், பிள்ளை.

‘நான் அதட்டலே. நான் சத்தமே கொடுக்கலியே’ என்றான் வண்டிக்காரன்.

‘பகபகபக்’ என்று கெளளி கனைத்தது. சடாரென்று வண்டி குடை சாய்ந்து, பள்ளத்தில் சரிந்தது.

‘எசமான்’ என்று கதறியபடி துள்ளி, இருப்புச் சட் டத்திலிருந்து கீழே குதித்துவிட்டான் வண்டிக்காரன்.

முத்தையபிள்ளைக்கு ஒன்றுமே புரியவில்லை. கூண் டிலே சடாரென அவர் மண்டை மோதிக்கொண்டதும், மூளையில் பொறி தெறிப்பது போல–மூளையே கலங்கிப் போனது போல்–இருந்தது அவருக்கு. வண்டி அந்தரடித் தது. தும்பு தெறிபட்டு, மாடுகள் விலகி ஒடி ‘அம்மாவ்’ என்று கதறின.

வண்டி ரோட்டுச் சரிவில் நழுவிப் புரண்டது. உள்ளேயே குலுக்கி எடுக்கப்பட்ட பிள்ளை வெளியே வந்து விழுந்தார். அவர் காதில், முண்டாசுப்பேர்வழி சிரிப்பது, கெக்கலித்துக் கேலி செய்து சிரிப்பது–பலமாக விழுந்தது. அருவி ஒலி போல் ஆரவாரித்துக் கொப்புளித்துக் குமிழியிட்டுத் துள்ளியது சிரிப்பொலி. அவர் தன் சுய நினைவை இழந்தார்.

மாடசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு சிறு அடிகூடக் கிடையாது. மாடுகள் காயம் படாமலே தப்பி விட்டன. வண்டிக்குக் கூடச் சேதமேற்பட வில்லை. அரிக்கன் லாம்புச் சிமினி தூள்தூளாகியிருந்தது தான் நஷ்டம். ஆனல் முத்தைய பிள்ளைக்கு பலமான அடி. –

வண்டிக்காரன் தன்னைச் சமாளித்துக் கொண்டதும், முதலில் செய்த காரியம் சாலைக்கரையான விழுந்து கும்பிட்டதுதான். பிறகு ஒடிப் போய், சிவகளை கிராமவாசிகள் பலரை எழுப்பி, கூட்டி வந்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/21&oldid=1071128" இலிருந்து மீள்விக்கப்பட்டது