பக்கம்:இரு விலங்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

7


அதுபோல் இந்த உலகத்தில் பிறந்து புண்ணிய பாவ வினைகளை ஈட்டியவர்களுக்கு அடுத்த பிறவிகளில் அவற்றால் வரும் இன்ப துன்பங்களைச் சேர்ப்பதற்குரிய ஆற்றல் அந்த வினைகளுக்கு இல்லை. அவை ஜடமாதலின் அவற்றைக் கொண்டு ஆருயிர்களுக்குரிய அநுபவங்களைத் தருவதற்கு ஏதேனும் ஒரு சக்தி இருக்கவேண்டும்; பிரமனே அந்தச் சக்தியாக இருக்கிறான், அந்த வேலை யைச் செய்வதற்குப் பிரமன் நியமிக்கப்பட்டிருக்கிறான்; இன்னாருக்கு இன்னபடி அநுபவத்தைத் தரவேண்டும் என்ற கணக்கு வைத்துச் செய்வதை, அறிவு இல்லாதவன் செய்யமுடியாது. குற்றவாளிகளுக்குரிய தண்டனையைக் கொடுக்கும் நீதிபதிக்குச் சட்டத்தில் நல்ல அறிவு இருக்க வேண்டும், சட்ட அறிவு இல்லாதவன் நடுநிலைமை இல்லாதவன்; நீதிபதி வேலைக்குத் தகுதி அற்றவன். பிரமனும் நடுநிலையில் நின்று அவரவர்களுடைய புண்ணிய பாவங்களின் கணக்கை எடுத்துக்கொண்டு அவற்றுக்கு ஏற்பப் பிறப்பையும், அதுபவங்களையும் விதிக்கவேண்டும். இவ்வாறு விதிப்பதனால் அவனுக்குவிதி என்ற ஒரு பெயர் உண்டு. திருவள்ளுவரும் 'வகுத்தான்', 'உலகியற்றியான்' என்ற பெயரால் அவனைச் சொல்வர்.

      "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
       தொகுத்தார்க்கும் துய்த்த லரிது" 

என்றும்,

      "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
       கெடுக உலகியற்றி யான்" 

என்றும் கூறுவர், அவரவர்களுக்குரிய அநுபவங்களை வகுக்கும் வேலையைப் பிரமன் செய்கிறான்.

 பிரமனுக்கு நான்கு முகங்கள், எட்டுக் கண்கள். அவன் எந்தப் பக்கத்திலும் கோடாமல் வேலை செய்ய வேண்டும். "கோடாத வேதன்" என்று அருணகிரியார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/29&oldid=1402455" இலிருந்து மீள்விக்கப்பட்டது