பக்கம்:இரு விலங்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

 அவனுக்குரிய தலமாகிய திருச்செங்கோடு இரண்டு பாடல்களில் இடம் பெறுகிறது. அருணகிரி நாதருக்கு அத் தலத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. கந்தர் அலங்காரத்தில் பல இடங்களில் அந்தத் தலத்தைப் பாராட்டுகிறார். கந்தர் அநுபூதியில் வேறு எந்தத் தலத்தையும் பாடாமல் நாகாசல மாகிய திருச்செங்கோட்டை மட்டும் பாடுகிறார். "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே" (23) என வரும் பாட்டில் அத்தலத்தின் பெருமையை ஒருவாறு பார்த்தோம். இந்நூலில் வரும் பாடல்களில், "மேதினியில் சேலார் வயற்பொழிற் செங்கோடு" (2) என்றும், "கன்னிப் பூகமுடன் தருமா மருவு செ ங் கோ டு’’ (3) என்றும் பாராட்டுகிறார். வயலும் பொழிலும் வளம் பெற்றிருப் பதை இணைத்துச் சொல்வது அருணகிரியார் இ ய ல் பு. திருச்செந் தூரைப்பற்றிச் சொல்கையில், "செந்துார்வயற் பொழில்" (40) என்று சொன்னார்.
 முருகப்பெருமானுடைய சீரையும் சிறப்பையும் உணர்த் தும் திருநாமங்கள் பல இப்பாடல்களில் வருகின்றன. அடிப் பட்டு வழங்கும் திருப்பெயர்களையும், அருணகிரி நா த ரே பாட்டுக்கு இயையப் படைத்துக்கொண்ட நாமங்களையும் காணலாம். எம் கோன், கருமால் மருகன், செங்கோடன், செம்மான் மகளைக் களவுகொண்டு வருமாகுலவன், சேவற் கைக்கோளன், போர் வேல ன், மன்றாடி மைந்தன், மாலோன் மருகன், மெய்ஞ்ஞான தெய்வம், வள்ளியை வேட்டவன், வானவர்க்கு மேலான தேவன், வேல் எடுத்து விளையாடும் பிள்ளை, வேல் தொட்ட காவலன் என்பன இந்த ஆறுபாடல்களில் வந்துள்ளன. 
 பிற தெய்வங்களையும் தேவரையும் அங்கங்கே குறித்துச் செல்கிறார், சிவபெருமான் மண்றாடியாகக் காட்சி யளிக் கிறான் (2). திருமால் மாலோனாகவும் (2), கருமாலாகவும் (3) நிற்கிறார்; அவர் பாரிசாத மலர் கொணர வலம்புரியை முழக்குகிறார், அதன் ஒசை விண் கமழ் சோலையும் வாவியும் கேட்கிறது (5); அவர் உந்தி மண் கமழ்கிறது (5.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/15&oldid=1296647" இலிருந்து மீள்விக்கப்பட்டது