பக்கம்:இரு விலங்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இரு விலங்கு

பலர் வாயிலாகக் கேட்டிருந்தார். அங்கே முருகப்பெரு மான் தன் திருக்கரத்தில் வேலை ஏந்திய கோலத்தில் நிற்கிறான். பெரும்பாலான இடங்களில் முருகனுடைய திருவுருவத்தில் வேலைத் தனியே சாத்துவார்கள். ஆனால் அங்கே மூல உருவத்திலேயே, திருக்கையில் வேலைப் பிடித்த கோலத்தில் ஆண்டவன் எழுந்தருளியிருக்கிறான். ஆகையால் செங்கோட்டு வேலன் என்ற வழக்கு இருக் கிறது. அந்தப் பெருமான் கண்கொள்ளாப் பேரழகன் என்பதைப் பலர் வாயிலாகக் கேட்டு அங்கே போய் ஆண்டவனைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை வளர்த்துக் கொண்டிருந்தார் அருணகிரியார்.

 ஒரு முறை அங்கே போய்ச் சேர்ந்தார். ஒரு பொருளிடத்தில் எத்தனைக்கு எத்தனை ஆசை மிகுகிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் மதிப்பு அதிகமாகும். மெல்ல மெல்லச்செங்குத்தான மலையின்மேல் அவர் ஏறிவிட்டார்; உச்சியை அடைந்தார். ஆண்டவனுடைய திருச்சந்நிதிக் குப் போகும்போது அவருடைய ஆர்வம் மிகுந்து குவிந் திருந்தது. அவருடைய ஆர்வமும், இயற்கையான அன்பும், ஆண்டவனுடைய தோற்றமும் எல்லாம் சேர்ந்து கொள்ளவே, அவருடைய கண்ணுக்கு ஒரு பெரிய பசி உண்டாயிற்று. அதனால் எம்பெருமான் சோதி வடிவினனாகத் தோன்றினான். அந்தக் காட்சியைக் கண்ட வுடனே அவருக்கு அதுகாறும் உண்டாகாதபேரானந்தம் உண்டாயிற்று. அதே சமயத்தில் ஒரு குறைகூடத் தோன் றியது. "இந்தப் பேரழகைக் காண்பதற்கு நமக்கு இரண்டு கண்கள்தாமே இருக்கின்றன? ஆயிரம் கண் இருந்தால் எவ்வளவு நன்றாகக் காணலாம்!" என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே, "எனக்கு இந்த உடம்பைத் தந்தவன் நான்முகன் அல்லவா? அந்த நான் முகன் எனக்கு நாலாயிரம் கண் படைத்திருக்கலாமே; அவ்வாறு படைக்க வில்லையே!" என்று இரங்கினார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/42&oldid=1297678" இலிருந்து மீள்விக்கப்பட்டது