பக்கம்:ஆண் சிங்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படித்தான் எழுதவேண்டும், இன்ன விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நான் வரம்பு வகுத்துக் கொள்ளவில்லை. பல ரகமான கதைகள்-பல நூறு கதைகள்-எழுதியிருக்கிறேன். அவற்றில் பதிமூன்று தான் இத்தொகுதியில் அடக்கம். எனது கதைகளின் தன்மைகளை எடைபோட்டு முத்திரை குத்தி, முடிவு கட்ட இந்த ஒரு தொகுதி போதாதாது. 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்கிற சாப்பாட்டுராமத்தனத்தை எழுத்து முயற்சிகள் விஷயத்தில் கையாள்கிறவர்கள் சரியான முறையை அனுஷ்டிப்பவர்கள் ஆகார்.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் ஹனுமான், சரஸ்வதி, புதுமை, ஆனந்தவிகடன், கல்கி, எழுத்தாளன் சிறப்பு மலர் ஆகியவற்றில் வெளியானவை. அப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியது.

சென்னை

13 ஜூன், 1964 வல்லிக் கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/10&oldid=1460122" இலிருந்து மீள்விக்கப்பட்டது