பக்கம்:இரு விலங்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

என்பது பாட்டு. இதைப் பாடிப் பார்த்தால் இதன் சந்த நயம் நன்கு புலனாகும்.

 அடுத்த பாட்டு முருகப்பெருமானது இளமை விளை யாட்டை நினைந்து பாடியது. அவ ன து திருவரையில் அணிந்த கிண்கிணி யோசையின் வலிமையைக் கூற வந்தவர், அது நன்கு தெளிவாகும் பொருட்டுக் கண்ணன் முழக்கிய வலம்புரியோசையோடு ஒப்பு நோக்கும்படி வைத்துக் காட்டுகிறார்.
 ஆறாவது பாட்டில் வள்ளி மணாளனே நினைப்பூட்டிக் கொண்டு கர்மத்தை வெல்ல வழி சொல்லுகிறார். தாயை நினைந்தால் நம்முடைய உள்ளம் குழந்தைத் தன்மை பெறு கிறது. காம உணர்ச்சி காளைப் பருவத்தின் விளைவு. உடம் பால் காளையாக இருந்தாலும் உள்ளத்தால் குழந்தையாக இருக்கப் பழகலாம் அல்லவா? முருகன் வள்ளி மணவாளன். அந்த வள்ளியாகிய தாய் நாம் இருக்கும் நிலவுலகில் வாழ்ந் தவள். அந்தப் பெருமாட்டியையும் அவளுடைய மணா ளனாகிய முருகனையும் போற்றினால் காமத்தை வெல்லலாம் என்பதை எதிர்மறை வகையில் இந்தப் பாட்டில் சொல் கிறார். 'நெஞ்சே மோகந்தரும் பெண்களின் அங்க எழிலைக் கண்டு மயங்குகிறாயே! வள்ளிமணவாளன் திருவடியை விரும்பிப் பக்தி பண்ண வில்லையே!' என்று சொல்கிறார்.
 காமத்தைப் பற்றிச் சொல்லும்போது அருணகிரிநாதர் முருகனை வள்ளிமணவாளனாக நினைக்கும்படி ஒரு தந்திரத் தைச் சொல்லித் தருகிறார். இந்தத் தந்திரத்தை வெளிப் படையாகச் சொல்லாவிட்டாலும் கூர்ந்து நோக்கினால் இது புலப்படும். 
    "கடத்தில் குறத்தி பிரான்அரு ளால்கலங் 
                காதசித்தத் 
     திடத்தில் புணையென யான்கடந் தேன்சித்ர
                மாதரல்குல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/12&oldid=1296572" இலிருந்து மீள்விக்கப்பட்டது