பக்கம்:இரு விலங்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ix

பொங்குகிறது. இந்தப் பாட்டில் அவனைத் தியானிப் பதனால் வரும் நலத்தைச் சொல்கிறார், "கன்னிப் பூகமுடன் தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே" என்கிறார். இந்தப் பா ட் டி ல் சாதிப் பெயர்கள் பல, தொனியில் அமைந்துள்ளன.

 நான்காவது பாடல் முருகனுடைய திருவடிப் பெருமை யைக் கூறுவது. இறைவனுடைய அடியார்களின் பக்குவத் துக்கு ஏற்ப அத்திருவடி நிற்பதை அருணகிரிநாதர் இதில் குறிப்பாகப் புலப்படுத்தியிருக்கிறார். உருவ வழிபாடு செய் வாருக்கும் தியானத்தில் ஈடுபடுவாருக்கும் மெல்ல மெல்ல அநுபவத்தில் தலைப்படுவாருக்கும் முடிந்த முடிபாகிய வீட்டின்பத்தை அடைவாருக்கும் தக்க வகையில் அந்தத் தண்டையம் புண்டரிகம் விளங்குவதை இந்தப் பாடல் தெளிவிக்கிறது. தொண்டர் கண்டு இன்புறும் புண்டரிகம் அது; தொண்டர் கண்டு அண்டி இன்புறும் தண்டையம் புண்டரிகம் அது; தொண்டர் கண்டு அண்டி மொண்டு இன்புறும் ஞானம் என்னும் தண்டையம் புண்டரிகம்; தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானம் என்னும் தண்டையம் புண்டரிகம். இவ்வாறு கூட்டிப் பொருள் கொள்ளும்படி அடைகளை அமைத்துப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் சந்தப்பாக்கள் பாடு வதில் மிக வல்லவர். இந்தப் பாட்டில் சந்த நயமும் வழி யெதுகை யின்பமும் இணைந்து இன்னோசை ததும்ப நிற் கின்றன.
    தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக்
         குஞ்சுத்த ஞானமெனும் 
    தண்டையம் புண்டரி கந்தரு
         வாய்தண்ட சண்ட வெஞ்சூர் 
    மண்டலம் கொண்டுபண் டண்டரண்
         டங்கொண்டு மண்டிமிண்டக்
    கண்டுருண் டண்டர்விண் டோடாமல்
         வேல்தொட்ட காவலனே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/11&oldid=1296562" இலிருந்து மீள்விக்கப்பட்டது