பக்கம்:இரு விலங்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இரு விலங்கு


பூட்டுவானாம்.

நான்முகனுக்கு இருவிலங்கே

.

 நான்முகனுக்கு என்ற சொல்லில் ஒரு குறிப்பு உண்டு. நான்கு பக்கத்திலும் முகத்தை உடையவனாக இருந்தும். நடுநிலைமையில் நின்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவனாக இருந்தும், இப்படி உண்மையை உணராமல் செய்கிறானே என்ற குறிப்பை உடையது அது. அடுத்த பாட்டிலும், 
  "நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே"
என்று பிரமனை நான்முகன் என்று பேசுவார் அருண கிரியார். 
 முருகப்பெருமானுடைய தி ரு வ ரு ளா ல் பிறப்பு அற்றுப் போகும் என்பது இந்தப் பாட்டின் கருத்து.

*

    பங்கே ருகன்எனப் பட்டோ 
       லையில்இடப் பண்டுதளை 
    தன்காலில் இட்டது அறிந்தில
       னோ? தனி வேல் எடுத்துப்

   பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ்
      சிலம்பு புலம்பவரும்

   எங்கோன் அறியின் இனிநான்
      முகனுக்கு இருவிலங்கே.
தாமரையில் இருக்கும் பிரமன் என்னைப் பிறவி எடுப்பவர் களின் கணக்கில் ஒருவனாக ஓலையில் எழுதுவதற்கு, அவன் பழங்காலத்தில் முருகன் தன் காலில் விலங்கிட்டதை நினைக்க வில்லையோ! அவன் அதை மறந்து பட்டோலையில் இடுவதை ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திப் பொங்கும்கடல்வாய்விட்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/38&oldid=1402449" இலிருந்து மீள்விக்கப்பட்டது