பக்கம்:இரு விலங்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இரு விலங்கு


வரப்போகிறதே என்று வாய்விட்டுப் புலம்பு வது போல இருக்கிறதாம். பெரிய மலை உருவத்தில் இருந்த கிரெளஞ்சாசுரன் அந்த வேல் தன்னைப் பொடிப் பொடியாக்கப் போகின்றதே என்று புலம்புகின்றானாம்.

                                         தனி வேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும்

எங் கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

 "முப்பத்து முக்கோடி அமரர்களுக்குப் பகையாக வந்தவர்களையே அழிக்கும் பெருமான் எனக்குத் துணை யாக இருக்கும்போதே பிரமனால் என்ன தீங்கு நேரப் போகிறது?" என்று தைரியத்தோடு பேசுகின்றார்.

கடுமையான தண்டனை

 ந்தப் பெருமான் இதை அறிந்தால் சும்மா இருப்பான முன்னலே ஒரு முறை பிரமன் தனக்குத் தீங்கு செய்தான் எ ன் று அவனுக்குத் தண்டனை அளித்தான்; செருக்கினால் வணங்காமல் சென்றான் என்ப தற்காகத் தலையில் குட்டிக் காலில் தளையிட்டான். இப்போதோ பழைய தண்டனை மாதிரி அல்ல; இன்னும் கடுமையாகத் தண்டனை தருவான்.
    எம்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/36&oldid=1402447" இலிருந்து மீள்விக்கப்பட்டது