பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை


பேராசிரியர் டாக்டர் இராம. மகாதேவன்

முன்னாள் துணைவேந்தர்

இராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம்

திருப்பதி - 517 507

ஊண், உறக்கம், அச்சம், இனப்பெருக்கம் இவை மனிதர்கட்கும் விலங்கினங்கட்கும் பொதுவானவை. தர்மம் என்பது மனிதர்கட்கு விசேஷமானது. அதில்லா தவர்கள் மிருகங்கள்.

விவாகத்துக்காகப் பெண் எடுக்கப் போகையில் கூட, 'தர்மத்தின் பொருட்டுப் பிரஜா பாலனத்திற்காகத் தங்கள் பெண்ணைத் தரவேண்டும்' என்று கேட்பது சாஸ்திர மரபு. அதுவும் பிதிர்க் கடனைத் தீர்ப்பதற்காக. ஆக, சிற்றின்பத்திலேயே பேரின்பத்தைத் தேடுவது மனிதன் பிறவி கடைத்தேற வழி.

இரண்டு கால் மிருகமான மனிதன் தன்னுடைய மிருகத்தனத்தை விட்டு (அதாவது மிருகத்திற்கே இயல்பான கீழ்தரமான குணங்களை விட்டு) புலனடக்கத்துடன் சகை, தயை முதலிய நற்குணங்கள் நிரம்பப்பெற்று பிறர் நலம் கருதி வாழ்ந்து, தேவனாக உயர்ந்து நிற்கின்றான். அப்படிப்பட்டவர்களைப் பகவான் கைகொடுத்துத் தன்னிடம் வருமாறு தூக்கிவிட்டுக் கொள்கின்றான். அப்படி ஒரு சிலரைத்தான் தூக்கி விடமுடியும். சமூகம் முழுவதையும் கடைத் தேற்ற முடியாது. அப்படித்தானே மக்களாக உயர முடியாதவர்கள் மாக்களாகவே வாணாலை வீணாக்குகிறார்கள்!