பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xix


கின்றேன். இதனை எழுதி முடிப்பதற்கும் ஏறக்குறைய நாற்பது நாட்கள் (நாள்தோறும் பத்து மணிப் பணி) ஆயின. இந்த நூலுக்கும் ஏழுமலையான் கடைக் கண் நோக்காகவே மானியம் கிடைத்தது. சற்றுக் குறைவாகவே கிடைத்தது. முட்டுவழிச் செலவில் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சற்றுக் குறைவாகவே உதவியது. மீதிப் பணம் அடியேனின் கையைக் கடித்தது. ஒருவாறு நூலும் அச்சு வடிவம் பெற்றது. மானியம் வழங்கிய திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது.

இந்நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டு உதவிய திருமுனிசாமி (மேலாளர், பூரீவேங்கடேசுவரா அச்சகம்) அவர்கட்கும் அட்டை ஓவியம் வரைந்து அச்சுக் கட்டைகள் தயாரித்தும், அட்டையை மூன்று வண்ணங்களில் அச்சிட்டும், அதற்குக் காப்புரை (Lamination) அமைத்தும் உதவிய ஓவிய மன்னர் திரு.P.N. ஆனந்தன் அவர்கட்கும், இதற்கு நன்முறையில் கட்டமைத்துக் கற்போர் கரங்களில் கவினுறத் தவழச் செய்த திரு. V. திருநாவுக்கரசுக்கும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன்.

புலவர் வீர. அரங்கனார் எம் குலத் தோன்றல். ரெட்டி குலத்தைச் சொல்லவில்லை; புலவர் குலத்தைச் சொல்லுகின்றேன். தெலுங்கு பேசும் எம் பக்கத்து ரெட்டி குல இளைஞர்கள்-இளமையில் ஆங்கிலக் கல்வி பெறும்வாய்ப்பிழந்தவர்கள் - வீறுசால் தமிழை- 'தமிழ், தமிழ்' என்று சொல்லுந்தோறும் நாவுக்கு அமிழ்தம்' என இனிக்கும் இனிய தமிழின்மேல் எல்லையற்ற காதல் கொண்டு திருவையாறு சென்று அங்குள்ள அரசர் கல்லூரியில் ஐந்தாண்டுகள் பயின்று வித்துவான்பட்டம் பெற்றார்கள். அவர்களுள் ஒருவர் வீர. அரங்கனார் எங்கட்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டத்திலுள்ள வரகூர், பவித்திரம், நாவலடிப் பட்டி சிற்றூர்கள் ரெட்டியார் பாகவதர்கள் அதிக