பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxi


இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரியர் டாக்டர் இராம. மகாதேவன் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர். ஆனைக்கொம்பன் அரிசிச் சோறு உண்டு தண்யெருநையாற்று நீரைப் பருகியதால் அறிவுக் கூர்மையுள்ள வடமொழிப் புலவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் வடமொழியில் எம்.ஏ., (1957), பூனா டெக்கான் கல்லூரியில் (1964) பி.எச்.டி (மொழியியல்) பட்டங்கள் பெற்றவர். பூனா கல்லூரியில் மொழியியலில் முதுநிலை படடங்கள் (1959, 61) பெற்றவர். புதுக்கோட்டை அரசர் கல்லூரி முஸ்ஸவுரி, திருப்பதி வடமொழி வித்தியா பீடம் முதலிய பல இடங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆய்வு அநுபவம் இவருக்கு நிறைய உண்டு. டெக்கான் கல்லூரி மைசூர் இந்திய மொழிகளின் ஆய்வு மையம் ஆகிய இடங்களில் (1959, 1961, 1965, 1968, 1976) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல் புகழ் ஈட்டியவர். நான்கு ஆய்வுநூல்கலையும் பத்துக்கு மேற்பட்ட அகழ் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு ஆய்வுலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். இறைவன் இங்ஙனம் பல்வேறு அநுபவங்களையும் அளித்ததோடு துன்பங்களையும் தெல்லைகளையும் இடைஇடையே வழங்கினான். இவற்றையெல்லாம் டாக்டர் மகாதேவன் நுகர்வினை (பிராரத்தம்) எனப் பொறுமையுடன் தாங்கி மகிழ்ந்தவர். துன்பத்திலும் இன்பங்காணுப் பண்பை இவருக்கு இறைவன் வழங்கியுள்ளான்.

பழகுவதற்கு இனியவர்; அடக்கம் இவரது அணிகலன்; நிறைகுடம் தளும்பாதல்லவா? அடியேன் திருப்பதியில் ஒய்வு பெறுவதற்கு முன்பே(அக்டோபர்-1977) இவர் வடமொழி வித்யாபீடத்தில் துணைப் பேராசிரியராகப் பதவி ஏற்றிருந்தாலும் (நவம்பர் 1976) நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த ஆண்டு அவர் இராஸ்டிரிய வித்யாபிடத்தின் (Deemed University) துணை